பிரபல கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியதால் திரை உலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வு இயக்ககம் (DRI) நடத்திய விரிவான விசாரணையில், ரன்யா ராவ் வெளிநாடுகளில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தது உறுதியாகியுள்ளது.
இந்த கடத்தலின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் ரூ.102.55 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த அபராதம் செலுத்தப்படாத நிலை ஏற்பட்டால், நடிகையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கம் கடத்திய சம்பவம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. ரன்யா ராவுடன் சேர்ந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் நிபந்தனையுடன் காவலில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் திரை உலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இதைப்பற்றி மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ரன்யா ராவும் இதுகுறித்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
Listen News!