• May 03 2025

உயிரோட இருக்கிறதே பெரிய விஷயமா..? உண்மையை உடைத்த நடிகர் அஜித்..!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்று மக்களின் மனங்களைக் கவர்ந்தவர் நடிகர் அஜித் குமார். மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையோடு பேசும் மனிதராகவும், ரசிகர்கள் அஜித்தை உயர்வாகப் பார்க்கின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொண்டு வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும், எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதனைப் பற்றி தனது மனதில் ஏற்பட்ட எண்ணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.


அந்த நேர்காணலில் அஜித், “தற்பொழுது வாழ்க்கையை குறை சொல்லுபவர்களை பார்க்கிறேன். உண்மையில் நாங்க எல்லாரும் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்.” எனக் கூறியிருந்தார். மேலும் “எனக்கே அதிகளவான காயங்கள், அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. சில நேரங்களில் நான் உயிரோட இருக்க மாட்டேனோ என்ற பயமும் ஏற்பட்டது.” என மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் அஜித்தின் வாழ்க்கைத் தத்துவம் இன்று மிக முக்கியமானதாக திகழ்கிறது. அத்துடன் உயிரோட இருப்பதே பெரிய விஷயம் என்பதால், ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்த விரும்புகிறேன் எனவும் கூறினார்.

Advertisement

Advertisement