சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 38 வருஷங்களுக்கு பிறகு சத்யராஜ் கை கோர்த்திருந்தார். மேலும் இவர்களுடன் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாகீர், நாகார்ஜுனா ஆகியோர் நடித்திருந்தனர்.
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கூலி படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. வசூலில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என பட குழுவினர் தெரிவித்து இருந்தாலும் பெரிய திருப்தியை தரக்கூடியதாக அமையவில்லை.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நாள் காட்சி முடிந்ததுமே அப்செட் ஆகி உள்ளனர். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அனிருத்தின் பிஜிஎம் தான் தூக்கலாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் சிம்ரன் வழங்கிய பேட்டியில், நான் ரஜினியின் தீவிர ரசிகை. அவருடைய எல்லா படங்களையும் ஒன்று விடாமல் பார்த்து உள்ளேன். இந்தப் படமும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ரஜினி எப்போதும் சிறந்த நடிப்பை தான் வெளிக் காட்டுவார். அவருடைய சண்டைக்காட்சிகள், பவர் பெக்கான காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டுக்கு திடீரென விசிட் அடித்துள்ளார். கூலி மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்களின் வெற்றியை கொண்டாடும் வகையிலேயே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றுள்ளார். தற்போது அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
Some meetings are timeless ✨
f
Grateful to spend a beautiful moment with our Superstar 🌟🙏
#Coolie & #TouristFamily success made this meet even more special 🤍@rajinikanth#Superstar #Rajinikanth #IconicMoment #Coolie #TouristFamily #Legend #Kollywood #IndianCinema… pic.twitter.com/9sJSFS0ZKQ
Listen News!