சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை அமைத்துக் கொண்டவர் நடிகை ரச்சிதா. இவரது இயல்பான நடிப்பும், அழகான தோற்றமும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இந்நிலையில், தற்பொழுது சமூக வலைத்தளத்தில் சாறியில் தோன்றிய அவரது லேட்டஸ்ட் லுக் வைரலாக பரவி வருகிறது.
அந்த போட்டோவைப் பார்த்த பலரும், "நீங்கள் எப்பவுமே யங் & அழகாகவே இருக்கிறீங்க..!" எனக் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
நடிகை ரச்சிதா முதன்முதலில் சின்னத்திரை உலகில் ‘சரவணன் மீனாட்சி’ என்ற மெகா சீரியலில் நடித்து மக்கள் மனதில் நுழைந்தார். அந்த சீரியல் மூலம் தான் அவரை மக்கள் அனைவரும் "மீனாட்சி" என்று அழைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்'-இல் கலந்துகொண்டு, தனது இயல்பான பேச்சு, மனம் திறந்த பார்வை, நேர்மை மற்றும் உணர்வுபூர்வமான செயல்களால் ரசிகர்களிடம் இன்னும் அதிகமான வரவேற்பைப் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், அவர் ‘FIRE’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் சினிமா ரசிகர்களிடையிலும் அவரது அடையாளம் வலுப்பெற்றது. அத்தகைய நடிகையின் சாறி போட்டோ தற்பொழுது இன்ஸ்டாவில் அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.
Listen News!