• Aug 23 2025

மனோஜூக்கு துரோகம் பண்ணிய விஜயா..? அதிர்ச்சியின் உச்சத்தில் குடும்பத்தினர்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மனோஜ் தன்னை  பாடசாலை ஒன்றுக்கு சீப் கெஸ்ட் ஆக  அழைத்துள்ளார் என்று பெருமையாக பேசுகிறார்.  இதனால்  உச்சகட்ட  சந்தோஷத்தில் விஜயா துள்ளிக் குதிக்கின்றார். மேலும் உன்னை தேடி கெளரவம் வரும், ஆனால் நான்தான்  உனக்கு துரோகம் செய்து விட்டேன் என்று சொல்லுகின்றார். 

 இதை கேட்ட எல்லாரும் அப்படி என்ன செய்தீர்கள்? என்று கேட்க,  ஒன்றும் இல்லாத ரோகிணியை கட்டி வைத்து விட்டேன்  என்று சொல்லுகின்றார். மேலும்  படிக்கிற பிள்ளைகளுக்கு போய்  சொல்லு யாரையும் ஏமாற்ற கூடாது அப்படி என்று சொல்லுகிறார். 

அந்த நேரத்தில் முத்து கிண்டல் அடித்துக் கொண்டிருக்க  அவரை  பேசிக்காட்டுமாறு ரோகிணி சொல்லுகின்றார். இதனால் முத்து நான்கு வரியில் மாதா, பிதா, குரு, தெய்வம் தான் முக்கியம் என்று  சிம்பிளாக சொல்லுகிறார். இதனால்  எல்லாரும் பாராட்டுகின்றார்கள் 


அதற்குப் பிறகு மனோஜை பேச சொல்லுகையில், அவர் யாருக்கும் புரியாமல் இங்கிலீஷில் பேசுகின்றார்.  இதனால்  தெருவில் இருந்த நாய் கூட கத்த தொடங்கியது. அதற்கு  எல்லோரும்  விழுந்து விழுந்து  சிரிக்கின்றார்கள்.  இதை பார்த்து கோபம் அடைந்த மனோஜ் வெளியே சென்று நாய்க்கு கல் எடுத்து அடித்து விட்டு வருகின்றார்.  அதன் பின்பு  நாயின் ஓனர் வந்து  நாயின் காலில்  காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு மருந்து போட காசு தருமாறும் 500 ரூபாய் வாங்கி செல்கின்றார். 

இறுதியில்  முத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது  ஸ்கூல் ஒன்றுக்கு டெக்கரேஷன் ஆர்டர் வந்ததாக மீனா சொல்கின்றார்.  அந்த நேரத்தில் ஸ்ருதியும்  நான் திறக்கிற ஹோட்டலுக்கு   நீங்கதான் ரிவ்யூ பண்ணனும் என்று சொல்லுகின்றார் .  

மேலும்  இப்போ  போன்ல வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கிறாங்க.. நீங்களும் ஸ்பீச்,  மோட்டிவேஷன், ரீல்ஸ் என்று போட்டு  சம்பாதிக்கலாம் என்றும் அட்வைஸ் பண்ணுகிறார். இதுதான் இன்றைய எபிசோட் .



 

Advertisement

Advertisement