• May 04 2025

"ஒரு பொக்கிஷமான தருணம் " மகனின் புகைப்படத்துடன் நடிகை ஷாலினி பதிவு...

Mathumitha / 12 hours ago

Advertisement

Listen News!

சினிமாவில் மாத்திரமின்றி நடிகர் அஜித்குமார் கார் ரேசிங்கிலும் அசத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் நேற்று முன்தினம் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்படுள்ளது.


இந்த விழாவிற்கு இவருடன் சேர்ந்து குடும்பத்திலுள்ள அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் அஜித் குடியரசு தலைவரின் கையால் பத்மபூஷன் விருதை பெற்றார். அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கொஞ்சிய புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


குறித்த பதிவில் புகைப்படங்களுடன் "ஒரு பொக்கிஷமான தருணம் " என கூறியுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement