• Jun 02 2025

கமல் விவகாரத்தில் விஜயை இழுத்த அந்தணன்.! கர்நாடகாவில் OTTயில் ரிலீஸாகும் தக் லைஃப்...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள படம் தான் “தக் லைஃப்”. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரிலீஸாவதற்கு முன் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. குறிப்பாக, கர்நாடகாவில் ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் தற்போது இந்தப் படத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.


சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், பிரபல சமூக விமர்சகர் மற்றும் யூடியூப் பேச்சாளர் அந்தணன், இந்த விவகாரம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்தணன் பகிர்ந்த தகவலின்படி, தக் லைஃப் படத்தின் போஸ்டரை ஒருவர் எரித்த சம்பவம் தற்பொழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கர்நாடகா அரசு சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளது எனவும் அந்தணன் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோவில் அதிகம் பேசப்பட்ட ஒரு பகுதி என்னவென்றால், “20 கோடி நஷ்டம் வந்தாலும், படம் ரிலீஸாக வேண்டாமென்றால் போகட்டும்” என கமல் கூறியதாக அந்தணன் தெரிவித்தது. இது அவரது பொறுப்புள்ள கருத்தாகப் பார்ப்பதா? அல்லது ஒரு மாதிரியான அழுத்தமா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில், “கர்நாடகாவில் மட்டும் ‘தக் லைஃப்’ படத்தை OTTயில் ரிலீஸ் செய்யலாம்” என்ற கருத்துக்கள் பரவி வருகின்றன. இது ஒரு சமாதான முயற்சி போல தோன்றினாலும், அதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.


அந்தணன் இதற்காக அளித்த விளக்கத்தில், “இப்படி ரிலீஸ் செய்தால், கர்நாடகா அமைப்புக்கள் அதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது பிரச்சனையை பெரிதாக்கிவிடும்.” எனத் தெரிவித்தார்.

அத்துடன், சமீபத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜயிடம் இருந்தும் இந்த விவகாரம் குறித்த ஒரு வார்த்தை கூட வெளிவராதது ஏமாற்றமளிப்பதாக அந்தணன் கூறியிருந்தார். “ இந்த மாதிரியான நேரத்தில் குரல் கொடுப்பது தான் முக்கியம். விஜயும் ஒரு தலைவராக இருக்கப் போகிறவர், இது போன்ற நேரங்களில் மெளனமாக இருப்பது சரியில்லை,” என்றார்.


Advertisement

Advertisement