• Jul 18 2025

அனுபமா கூட நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்..! அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருவதோடு தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பெற்று மாஸ் காட்டியுள்ளது.

இத்தனை ஆண்டு காலமாக சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பெற்று வந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல் படிப்படியாக முன்னேறி தற்போது முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் பிரபலங்களை பிரபல சேனல்களும் பேட்டி எடுத்து வருகின்றன.


அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பராக செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பனை பேட்டி எடுத்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


அதாவது, சிறகடிக்க ஆசை சீரியலில் எனக்கு சின்ன ரோல் என்றாலும் அது மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. நான் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் அதில் 40 படங்களுக்கு கிட்ட திரைக்கு வராமல் நிறைய பிரச்சனைகளால் முடங்கிப் போனது. ஆனா தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படமொன்றில் அவரை ஜொள்ளு விடும் ஒரு கேரக்டராக நடிக்கிறேன். அதுபோல கவுண்டமணியுடனும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். 

அதேபோல நிறைய சீரியல்களிலும் நடித்துள்ளேன். ஆனால் எனக்கு மிகவும் ரீச் ஆகிக் கொடுத்த சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். இந்த சீரியலில் அனைவருக்கும் கதை இருக்கும். யாரையும் ரொம்ப நாள் காணவில்லை என்ற பிரச்சனை இருக்காது என தனது அனுபவத்தை கூறியுள்ளார் பழனியப்பன்.

Advertisement

Advertisement