• Apr 27 2025

"டிராகன்" படத்தை பாராட்டிய பிரபல நடிகர்...! சந்தோசத்தில் அஸ்வத் மாரிமுத்து!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனக்குக் கிடைத்த பெரிய மரியாதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றார். டிராகன்’ படத்தின் மூலம் சிறந்த இயக்குநராக மாறிய இவர், தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்பொழுது இவர் பற்றிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து படத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்துள்ளார். அவரிடம் தனது படத்தின் முக்கிய அம்சங்களை கூறிய இயக்குநர் இப்படம் மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பின் போது, ரஜினிகாந்த் படக்குழுவிற்கு தனது பாராட்டுக்களையும் வழங்கினார். மேலும் " தரமான திரைக்கதை கொண்ட படங்கள் மட்டுமே வெற்றி பெறும்!" என்று கூறி  இயக்குநரை உற்சாகப்படுத்தினார். இது படக்குழுவிற்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் கனவு படைப்பாக உருவான ‘டிராகன்’, தமிழ் திரையுலகில் புதிய திருப்புமுனையாக காணப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement