சமீபகாலமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பல சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், தற்போது மலையாள நடிகரான சைன் டாம் சாக்கோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட்பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கும் சைன் டாம் சாக்கோ தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியதோடு பல நடிகைகளிடம் தவறான முறையில் நடந்துகொண்டார் எனும் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து கருத்துக்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இவர் இப்போது போதை மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் இவ்வழக்கில் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி உள்பட மூவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். என செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!