• May 21 2025

இன்ஸ்டாகிராமில் கசியும் 'DD Next Level' காட்சிகள்..! கோபத்தில் கொந்தளிக்கும் படக்குழு..!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வெற்றிகரமான பாதையை வகுத்து வந்த நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்துள்ள ‘DD Next Level’ திரைப்படம், மே 17 அன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தனது முதல் நாளில் 2.85 கோடி வசூலித்து, ஹாரர்-காமெடி வகைப் படங்களில் ஒன்று எனப் பாராட்டப்பட்டது.


இந்நிலையில், படத்தின் முக்கியமான காட்சிகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் சந்தானம் தரப்பினர் நேரடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். புகாரில், “இணையத்தில் சட்டவிரோதமாக 'DD Next Level' திரைப்பட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது படத்தின் வணிகரீதியான வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும், “காட்சிகளை வெளியிட்டவர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், படத்தின் முக்கிய ஹாரர் மற்றும் காமெடி கலந்து கொண்ட சில முக்கிய சீன்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது. ‘DD Next Level’ படத்தின் தயாரிப்பு நிறுவனம், மேலதிகமாக இதுபோன்ற வீடியோ காட்சிகள் வெளியாவதை கட்டுப்படுத்த சைபர் கிரைம் பிரிவின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement