• May 21 2025

15 வருட திருமண வாழ்க்கை சீரழிகிறதா...? தீவிரமடைந்த ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகாரம்...!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வ கதைகளின் நாயகன் எனப் பெயர் பெற்ற நடிகர் ஜெயம் ரவி, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக மீடியா மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே நிலவி வரும் விவாகரத்துப் பிரச்சனை கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.


இந்த விவகாரத்தில் இருவரும் தங்கள் நிலைப்பாடுகளை அறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றனர். இதில், ஆர்த்தி வெளியிட்ட சமீபத்திய அறிக்கை மிகவும் உணர்ச்சி சார்ந்ததாகவும், பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது.

சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தனித்தனியாக உரிமை மற்றும் நிம்மதிக்கான போராட்டத்தை தங்களது பதிவுகள் மற்றும் கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் ஆர்த்தி வெளியிட்ட புதிய அறிக்கை, பலரும் எதிர்பார்க்காத வகையில் விமர்சனம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


அறிக்கையில் ஆர்த்தி கூறியிருப்பதாவது, “அனைத்து வடிவத்திலும் துன்புறுத்தப்பட்டதாக ரவி கூறுகின்றார். அந்த வார்த்தையைக் கேட்கும்போது மனம் வலிக்கிறது. திரையில் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் அடக்க முயற்சி செய்ததாகச் சொல்வதைக் கேட்கும் போது வேதனையிலும் சிரிப்பு தான் வருகிறது." என்றார். இந்தக் கருத்து தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement