• Jul 18 2025

டிஸ்னியின் அடுத்த அனிமேஷன் திரைப்படம்...!மீண்டும் ஹீரோவான கறுப்பு பூனை...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனிமேஷன் திரைப்படங்களுக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் அனிமேஷன் மூலம் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் the lion king ஆரம்பத்தில் அனிமேஷன் திரைப்படமாகத்தான் வெளி வந்து வெற்றியை பெற்றது. பின்பு  உயிர் உள்ள உருவங்களை கொண்டு பின்னர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


மேலும் தற்போது  "கருப்புப் பூனையை" மையமாக வைத்து 'Gatto' என்ற புதிய அனிமேஷன் படத்தை தயாரித்து வருகின்றது டிஸ்னியின் பிக்சர் நிறுவனம் . இந்த திரைப்படம்  பார்ப்பதற்கு கைகளால் வரையப்பட்ட  ஓவியம் போல் இருக்கும் என நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் 2027ஆம் ஆண்டு  'Gatto' என்ற அனிமேஷன் படம் வெளியாகும் என்றும் தகவல்சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 


இந்த நிலையில் 3 மாதங்களுக்குப் முன் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை "Flow"  என்ற படம் பெற்றுள்ளதாக  தகவல் வெளியாகி இருந்தன. இந்த திரைப்படம் Flow படமும் கருப்புப் பூனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத் தகவல் அறிந்த அனிமேஷன் படத்தின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். 


Advertisement

Advertisement