• Jul 18 2025

காந்தாரா 2: ரிஷப் ஷெட்டியின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

2022 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய சினிமாவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹிட்டாக உயர்ந்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்ததோடு இயக்கத்தையும் தனியே கவனித்தவர் ரிஷப் ஷெட்டி. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா ஹிட்டாக அமைந்தது.


அந்த படம் வெளியான போது ரிஷப் ஷெட்டிக்கு ரூ.4 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தயாராகி வரும் ‘காந்தாரா 2’ படத்துக்காக அவர் சம்பளத்தை 2400% அதிகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு ரூ.100 கோடி சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதோடு லாபத்தில் பங்கும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம். இதன்படி குறைந்தபட்சம் ரூ.50 கோடி வரை கூடுதலாக பெறும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement