தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் மற்றும் பல்வேறு இணையதள தொடர்களில் தனது தனிப்பட்ட நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கயாடு லோகர். தன் திறமையை மட்டுமல்ல, தனது நேர்மையான கருத்துக்களாலும் இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய பட்டாளத்தை உருவாக்கியிருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்திய ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் போன்ற சமகாலச் சொற்கள் குறித்து பஞ்ச் அடித்துப் பேசியுள்ளார் கயாடு. அந்த உரையாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த நிகழ்ச்சியில் கயாடுவிடம், “உங்களுக்கு தற்பொழுது ஏதாவது ரிலேஷன்ஷிப் இருக்கா?” என்று கேட்கப்பட்டிருந்தது . இதற்கு கயாடு, "இந்த தலைமுறையினர் புதுப் புது வார்த்தைகளுக்கு புதுசு புதுசா அர்த்தம் கண்டு பிடிக்கிறார்கள். எனக்குத் தெரிஞ்சது ஒரே ஒரு ஷிப் தான். அது கடலில போற கப்பல். ஆனால் இப்போ ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் எல்லாம் வந்து விட்டது." என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது, "நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல. நான் இப்ப எந்தவொரு ஷிப்பிலும் இல்ல. யாரோடையும் ரிலேஷன்ஷிப்பிலயும் இல்லை." எனத் தெரிவித்திருந்தார். இத்தகவல் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Listen News!