• May 06 2025

'DD Next Level' வெளியீட்டு விழாவை உணர்வுபூர்வமாக மாற்றிய சந்தானம்..என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காமெடி ஜோடி என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர்கள் சிம்பு மற்றும் சந்தானம். சிலம்பரசனின் திரைப்படங்களில் காமெடியை அழகாக தந்த, கதாநாயகனை மிஞ்சிய நடிப்பில் ரசிகர்களின் மனதை வருடியவர் சந்தானம்.


அந்த நட்பின் ஆழம் இன்னும் அழியாத வகையில் தற்போது மீண்டும் ஒலித்துள்ளது. 'DD Next Level' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சந்தானம் ஒரு உருக்கமான உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் போது, சிம்புவின் நட்பும், மனிதநேயம் நிரம்பிய செயலும் அனைவரையும் மெய்மறக்க வைத்தது.


விழாவின் ஒரு கட்டத்தில் சந்தானம், தனது பழைய தோழனான சிம்புவைப் பற்றி கூறும்போது உணர்ச்சிவசப்படுத்தும் வார்த்தைகளுடன் தெரிவித்தார். அதன் போது அவர் கூறியதாவது, “சிம்பு என்னோட நண்பர். அவரோட 46வது படத்தில சிம்புவுக்கு நிகராக ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் தனக்கு இருக்கணும் என்று அவரே இயக்குநரிடம் சொன்னார். இதைக் கேட்டு நான் அசந்து போயிட்டேன். அவருடைய மனசுக்கு நான் எப்போதும் அவர் பின்னாடியே நிற்பேன். இது ஒரு நட்பு அல்ல, ஒரு மனிதத்துவத்தின் பிம்பம்.” என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த உரையின் மூலம் DD Next Level படத்தின் இசை வெளியீட்டுக்கு கலந்துகொண்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வை நினைவில் வைக்கும் தருணமாக சந்தானம் மாற்றியுள்ளார். சினிமா மற்றும் நட்பை இணைத்த இந்த தருணம் விழாவுக்கு ஓர் உணர்வுபூர்வமான பக்கத்தைச் சேர்த்தது.

Advertisement

Advertisement