• May 29 2025

அமைதியான நெருப்பு..! பிக்பாஸ் ஆரியின் புதிய அவதாரம்...என்ன தெரியுமா.?

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னிச்சையான பாதையைத் தேர்ந்தெடுத்து, தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆரி அர்ஜுனன். இவர், பிக்பாஸ் சீசன் 4-ல் வெற்றி பெற்று அதிகளவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். 


இந்நிலையில், பிக்பாஸ் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை திரையுலகில் தீவிரமாக களமிறங்கியுள்ள ஆரி, தற்போது பிரபல இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் திரைப்படத்தில், பொலீஸ் அதிகாரியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகளவான வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தனது புதிய படத்தை உருவாகி வருகின்றார். இந்தப் படத்தில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன், ஆரியை தேர்வு செய்ததற்கான காரணத்தை, ஊடகங்களிடம் உணர்ச்சிகரமாக பகிர்ந்திருந்தார். அதன்போது அவர் தெரிவித்ததாவது, “ஆரி பார்ப்பதற்கு அமைதியானவராக இருந்தாலும் உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அவரது நேர்மை, பதற்றமில்லாத நடை, திடமான பார்வை இவை எல்லாம் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு மிகச்சரியானது.” என்றார்.

இந்த திரைப்படம், ஆரிக்கு ஒரு mass entry மட்டும் அல்ல, அவரது நம்பிக்கையை நிரூபிக்கும் தருணமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இப்படத்திற்குரிய தலைப்பினை படக்குழு விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளது. 


Advertisement

Advertisement