• May 29 2025

எங்களை மாதிரியே..மகள்களையும் நேசியுங்க..! இரட்டைக் குழந்தைகளை அறிமுகம் செய்த சினேகன்..

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் கலை உலகத்தில் கவிஞராக, பாடலாசிரியராக மற்றும் ரியாலிட்டி ஷோ என்பன மூலம் அனைவரது மனதையும் கவர்ந்தவர் சினேகன். இவர் தனது வாழ்க்கைத் துணை கன்னிகா ரவிகுமாரை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.


இந்த தம்பதியர் கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டைக் குழந்தையினைப் பெற்றிருந்தனர். இந்நிலையில், தற்போது அந்த மகள்களின் புகைப்படத்தை சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்போது, தனது இரட்டைக் குழந்தைகளைத் திரையுலகிலும், ஊடகத் துறையிலும் உள்ள நண்பர்கள், உறவுகள் மற்றும்  ரசிகர்கள் என அனைவருக்கும் பாசமுடன் அறிமுகப்படுத்துகின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.


மேலும்,"எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு… எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்…!" என உருக்கமான பதிவினையும் வெளியிட்டிருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த போட்டோஸ் இணையத்தில் வெளியாகி சில நிமிடங்களுக்குள் அதிகளவான பார்வையாளர்களைப் பெற்றுக்கொண்டது. மேலும் இதனைப் பார்த்த திரையுலக நட்சத்திரங்கள், ஊடக நண்பர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர்.

Advertisement

Advertisement