• May 16 2025

அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய பிரபல தயாரிப்பாளர்..! யார் தெரியுமா.?

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் இன்று காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், சமீபத்தில் நடந்து முடிந்த இல்ல திருமண விழாவால் ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றவருமான ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிதி நிலை, பணப்புழக்கம், முதலீட்டு போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெறவே நடத்தப்படுகிறது என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்பொழுது ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் நடிக்கும் 'இட்லிக்கடை' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' போன்ற படங்களை தயாரித்து வருகின்றார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முக்கியமான திரைப்படங்கள். இதனால், தயாரிப்பாளரின் வீடுகளில் நடக்கும் சோதனை திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் பாஸ்கரனின் தனியார் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வீட்டில் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர். சோதனை இன்னும் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement