• May 10 2025

ரசிகரின் கையை தட்டி விட்டு சென்ற கௌதம்மேனன்...! ஏன் தெரியுமா?

Roshika / 10 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கௌதம்மேனன்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி எனப் பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகின்றார் . இவர் சந்தானம் நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது .


அதாவது கௌதம்மேனன்  பல முன்னனணி ஹீரோக்களை வைத்து  திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் பல வெற்றி திரைப்படங்களாக அமைந்தன. சமீபகாலமாக திரைப்படங்களில் நடித்தும்  வந்துள்ளார். இவர் இயக்கும்  காதல் கதைக்களத்துடன் அமைந்த திரைப்படத்திக்கென தனி ரசிகர்கள் உண்டு.மின்னலே, வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா  எனப் பல திரைப்படங்களை கூற முடியும்.


இவர்  ரசிகரின் ஒருவரின் கையை பிடித்து தட்டி விட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக போனை உயர்த்தி பிடித்திருந்த போது கௌதம்மேனன் அவரது கையை தட்டி விட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement