பிக்பாஸ் சீசன் 3 மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவர்ந்தவர் நடிகை லாஸ்லியா மரியனேசன். இலங்கையைச் சேர்ந்த இந்த இளம்பெண், பிக்பாஸ் வீட்டிற்குள் தனது நேர்த்தியான பேச்சு மற்றும் சுட்டித்தனத்தால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.
அந்நிகழ்ச்சியின் மூலம் அவர் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுக் கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, திரைத்துறையில் தன்னை நிலைப்படுத்துவதற்காக கூகுள் குட்டப்பா, Friendship போன்ற படங்களில் நடித்திருந்தார். இவை எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் அவரின் பெயரையும் முகத்தையும் நிலைக்க வைத்திருந்தது.
சமீபத்தில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடுமையான ஜிம் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக சின்னத்திரை பிரபலங்களில் சிலர் தான் இப்படியான பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. அந்தவகையில் லாஸ்லியா இப்படி கடினமாக பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டது, ரசிகர்களிடையே புதிய அவதாரக் காட்சியாகவே மாறியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் "என்ன ஆச்சு லாஸ்லியாவிற்கு?இப்படி கஷ்டப்பட்டு பயிற்சி செய்யுறாங்க..!" என்று கமெண்ட்ஸைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் லாஸ்லியா புதிய படத்திற்கான வாய்ப்பிற்காகவே இப்படி எல்லாம் செய்கிறார் என்று கருதுகின்றார்கள்.
Listen News!