• Apr 26 2025

"வீர தீர சூரன்" படத்தின் தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்..! சந்தோசத்தில் ரசிகர்கள்!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் சிறந்த நடிகரான விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாவதில் பல பிரச்சனைகள் காணப்பட்டது. இந்நிலையில் பல தடைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைக் கடந்து டெல்லி உயர்நீதிமன்றம் தற்பொழுது முக்கிய உத்தரவொன்றினைப் பிறப்பித்து இப்படத்தினை திரையிட அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விக்ரம் நடிப்பில் உருவான இந்த அதிரடியான படம், மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 'வீர தீர சூரன்' படத்திற்கு நான்கு வாரங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்தத் தடையை டெல்லி உயர்நீதிமன்றம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


படம் வெளியிடுவதற்கு நான்கு வாரங்கள் தடை விதித்தமை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியது. அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவல் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி கிடைத்த பிறகு, தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் ஏப்ரல் முதல் வாரம் இப்படம் வெளியாவதற்கான வாய்ப்புள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement