• Apr 26 2025

நாக சைதன்யாவுடன் ஜோடி சேரும் பிரபல ஹாலிவூட் நடிகை..! கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கொலை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் தற்போது தென்னிந்திய திரையுலகில் விரைவாக வளர்ந்து வரும் ஹீரோயினிகளில் ஒருவராகக் காணப்படுகின்றார். 

அண்மைய காலத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்ததோடு, ரசிகர்களிடையே தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியிருக்கின்றார். இப்பொழுது அந்நடிகையின் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த ‘கொலை’ திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு வரவேற்கப்பட்ட மீனாட்சி, அந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இதனையடுத்து, சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படம் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமான வசூலைப் பெற்றது.

இந்நிலையில், மீனாட்சி சவுத்ரியின் அடுத்த பட வாய்ப்புப் பற்றிய தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாக சைதன்யாவின் 24வது திரைப்படத்தில், மீனாட்சி ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement