தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து தற்பொழுது அரசியலில் திரும்பிய தளபதி விஜய் அரசியலிலும் நாயகனாக மாறியுள்ளார். 'த.வெ.க' என்ற அரசியல் கட்சி மூலம் அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியிருக்கும் விஜய், தற்போது அரசியலில் மட்டுமல்லாது டிஜிட்டல் ஊடகங்களிலும் தனது சக்தியை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், இன்று காலை யாரும் எதிர்பாராத வேளையில் நடிகர் விஜய் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இந்த வீடியோ மூலம் உங்களை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து நேரடியாக பேசுவது போல் இருக்கிறது. என்னுடைய பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தது நம்ம சோசியல் மீடியா ரசிகர்கள் தான். ஆனால் இப்போது எல்லாரும் ரசிகர்கள் இல்ல, நீங்க எல்லாரும் நம்ம கட்சியின் VIRTUAL WARRIORS..!” எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கூறிய விஜய், தனது அரசியல் கட்சிக்கு இணையத்தளங்களில் ஆதரவு தரும் தனிப்பட்ட பிரிவை உருவாக்கியுள்ளார். இந்த VIRTUAL WARRIORS எனப்படும் டிஜிட்டல் படை சமூக வலைத்தளங்கள், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்திலும் கட்சியின் செயல்கள் மற்றும் இளைஞர்களின் அடையாளமாக செயல்படவிருப்பதாகவும் கூறியிருந்தார்.
விஜயின் இந்த வார்த்தைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. "நீங்கள் இனி ரசிகர்கள் இல்ல, WARRIORS...!" என்ற அவரது வார்த்தை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது. மேலும் விஜய் வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் பின்னணியில், இது ஒரு முக்கிய அரசியல் திட்டமிடல் என்பது தெரியவந்துள்ளது.
Listen News!