• May 04 2025

தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் மோகன்லால்..! தியட்டரை அதிரவைக்க ரெடியாகும் ரசிகர்கள்..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்கும் வகையில், மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்த ‘துடரும்’ திரைப்படம், தற்போது தமிழில் 'தொடரும்' என பெயர் மாற்றத்துடன் டப் செய்யப்பட்டு மே 9ம் திகதி திரைக்கு வரவுள்ளது. மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டான இந்தத் திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் படத்தில் மோகன்லால் அவர்களின் நடிப்பு, ரசிகர்களைத் திரைப்படத்துடன் இணைத்து வைத்திருக்கும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றது. அவர் சாமான்ய மனிதனாகவும், பின்னால் எதையோ மறைத்துக் கொண்டிருக்கும் மர்ம நபராகவும் படம் முழுவதும் இரட்டை நிலைப்பாட்டில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் தனது நடிப்பை மின்னச் செய்துள்ளார்.

மோகன்லாலின் தோற்றம், அவரது உடல் மொழி, மென்மையான வசனங்கள், அனைத்தும் இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பைத் தருகின்றன. மலையாளத்தில் இப்படம் வெளியானது முதல், பல விமர்சகர்களும் "மோகன்லால் மீண்டும் ஒரு மாஸ்டர் பீஸ் கொடுத்துள்ளார்..!" எனக் கூறியுள்ளனர்.


தமிழ் மொழிபெயர்ப்பு இந்தப் படத்தின் வலுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘துடரும்’ என்ற பெயர், தமிழில் ‘தொடரும்’ என மாற்றப்பட்டுள்ளது என்பது சின்ன மாற்றம் தான், ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரியது.

மோகன்லால் தமிழ் ரசிகர்களிடையே ஏற்கனவே புகழ்பெற்றவர். பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் மலையாளத்தில் நடித்த படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் போது, ரசிகர்கள் அதை ஒரு தனித்துவமாகக் கருதி ரசிக்கின்றனர்.

Advertisement

Advertisement