சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புகள் கொண்ட படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தற்போது அமெரிக்கா மற்றும் பிற ஓவர்சீஸ் நாடுகளில் ஆரம்பமாகி, அதிரடி புக்கிங்களுடன் முன்னேறி வருகிறது. குறிப்பாக வட அமெரிக்காவில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே புக் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், கேரளாவில் இன்று காலை தொடங்கிய முன்பதிவில் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் புக்கிங் செய்தனர். ஒரு மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது.
தமிழ்நாட்டிலும், இன்று இரவு 8 மணிக்கு முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், இணையதளங்களில் ரசிகர்கள் விரைவாக டிக்கெட் பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவுகளிலேயே இப்படம் பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாண்டியையும், ரசிகர்களின் வரவேற்பையும் கொண்டு ‘கூலி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
Listen News!