• May 08 2025

படத்தை புரொமோஷன் செய்ய இப்படியும் செய்வாங்களா..? நானியின் செயலால் வியந்த ரசிகர்கள்..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் தனித்துவமான நடிகராக பெயர் பெற்றவராக நேச்சுரல் ஸ்டார் நானி விளங்குகின்றார். தனது சீரான நடிப்புத் திறமை, எளிமையான கம்பீரம் மற்றும் ரசிகர்களை நேரடியாக சந்தித்துக் கதைக்கின்ற ஆளுமை என்பன நானியை இன்று தெலுங்கு ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தில் நிலை நிறுத்தியுள்ளது.


இப்போது, இதற்கு எடுத்துக்காட்டான தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹிட் 3’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள், உண்மையிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகத்தையே வியக்க வைத்துள்ளது.

அதிகார பூர்வமாக வெளியான தகவலின்படி, நானி தற்போது அமெரிக்காவில் 45 தியேட்டர்களுக்கு நேரில் சென்று தனது படத்துக்கான புரொமோஷனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்த 45 தியேட்டர்களிலும்  படத்துக்கான சிறப்பு காட்சிகளைப் பார்வையிட்டதுடன் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து போட்டோக்களை எடுத்து ஒவ்வொரு இடத்தையும் ஒரு பண்டிகை போல மாற்றியுள்ளார்.


இது ஒரு நடிகராக அவரது படத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதற்கான உண்மையான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. குறிப்பாக “ஒரு நடிகர் படத்தில் நடித்துமுடித்து விட்டால் அதற்குப் பிறகு அந்தப் பக்கமே வரமாட்டார்கள். அந்தவகையில் நானி இப்படி நேரில் சென்று பார்த்தது வேற லெவல்..!” என ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.


Advertisement

Advertisement