• Apr 26 2025

இந்திய அளவில் "குட் பேட் அக்லி" வசூலில் இறக்கம்..! 7 ஆவது நாள் வசூல் விபரம் இதோ...

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் தல அஜித் நடித்த "good bad ugly " திரைப்படம் ரசிகர்களின் பாரிய எதிர்பார்ப்பில் வெளியாகியது . இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.


இந்த படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் இந்திய அளவிலான வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி முதல் நாளில் 29.25 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் இன்றைய நாளுக்கான வசூல் தொகை 3.49 கோடியாக குறைந்துள்ளது.


இந்திய அளவிலான மொத்த வசூல் தொகை சுமார் 111.79 கோடியாக காணப்படுகின்றது. மேலும் படம் கிட்டதட்ட 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் பாடலுக்கு அவர் 5 கோடி அபராதம் கேட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் படத்தின் pre hd எனும் பெயரில் வீடியோ கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் காரணமாக தியேட்டர் சென்று படம் பார்ப்பவர்களின் தொகை குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement