தெகிடி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி ஐயர், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதோடு, பிக் பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, மூன்றாம் இடத்தை பிடித்து மக்களை மனதளவில் ஈர்த்தார்.
38 வயதாகும் ஜனனி ஐயர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்தார்இந்த நிலையில் இன்று ஜனனி ஐயர் தனது திருமண நிச்சயதார்த்தத்தை எளிமையாகவும் அழகாகவும் நடத்தியுள்ளார். அவர் சாய் ரோஷன் ஷாம் என்பவரை தனது வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்துள்ளார். சாய் ரோஷன் ஷாம் பைலட் மற்றும் ஏர்கிராஃப்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றார்.
தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இவரது புகைப்படங்களிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது அவர்களது மகிழ்ச்சி நிரம்பிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்கள் இதோ...
Listen News!