விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ 'குக் வித் கோமாளி' சீசன் 6 முழுவீச்சில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த ஷோ மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் முதல் எலிமினேஷன் இன்று நடந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த முதல் எலிமினேஷனில் சௌந்தர்யா வெளியேற்றப்பட்டுள்ளார். இன்று ஒளிபரப்பான எபிசோடின் இறுதியில் இது அறிவிக்கப்பட்டது.
அவர் வெளியேறுவதை கேட்டு பிரியா ராமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏமாற்றம் மற்றும் உருக்கமான தருணமாக சௌந்தர்யா எமோஷ்னலாக கண்களில் கண்ணீர் விட்டு அனைவரிடமும் விடைபெற்று ஷோவில் இருந்து வெளியேறினார்.
சௌந்தர்யாவின் நேர்மையான பங்களிப்பு மற்றும் பாசமான தன்மைக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!