அண்மையில் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்தி ED விசாரணை குறித்த விசாரணையில் தொழிலதிபர் ரத்திஷ் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தற்போது ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வந்த இட்லி கடை ,பராசக்தி , இதயம் முரளி மற்றும் str 49 திரைப்படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷ் நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதனால் அந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளது. மேலும் ரத்திஷ் இந்த படத்திற்கு sk க்கு சம்பளத்திற்கு பதில் வீடு கட்டி தருவதன் ஒப்பந்தத்தின் படி இவர் நடிப்பதற்கு சம்மதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் டாஸ்மாக்கில் முறைகேடாக சம்பாத்தித்த பணம் ரத்தீஷ் ,ஆகாஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண் விஷ்வா மூலம் சினிமாவில் பயன்படுத்தப்பட்டதாக அமுலாக்கத்துறை இவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இதன் காரணமாக பொங்கலுக்கு பராசக்தி திரைப்படம் வெளியாவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விசாரணைகளின் படி சிவகார்த்திகேயன் கைது செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!