• Apr 27 2025

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு மரியாதை செய்த நடிகர் - வெளியான தகவல் இதோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, வேதா இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா, தமிழக அரசியல் மற்றும் திரையுலகத்தில் தனது தனித்துவமான பயணத்தால் மக்கள் மனதில் என்றும் நிலையான இடத்தை பெற்றவர். அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24 இன்றைய தினம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ஆதரவாளர்கள், அதிமுக கட்சியினரும் வெகுவிமர்சனமாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்தவகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை வேதா இல்லத்திற்கு நேரில் சென்று ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது மரியாதை செலுத்திய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


ரஜினிகாந்தும், ஜெயலலிதாவும் திரையுலகத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வாழ்விலும் முக்கியமான இடம் பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரே திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே ஒரு நல்லுறவு இருந்தது.

அதிமுக கட்சியினர் மற்றும் ஜெயலலிதா தொண்டர்கள் தமிழகமெங்கும் பல்வேறு சமூக சேவைகள், அன்னதான நிகழ்வுகள் மற்றும் இரத்ததான முகாம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்து பல உரைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement