தென்னிந்திய சினிமாவில் அழகு , திறமை மற்றும் தைரியமான பேச்சு என்பன மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் நடிகை மாளவிகா மோகனன். மலையாள சினிமா மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தாலும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் ரசிகர்களால் கவனிக்கபட்ட மாளவிகா இதனை அடுத்து ‘மாறன்’ மற்றும் ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனங்களைக் கவர்ந்தார்.
இப்போது நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தான் தனது திரைப்பயணத்தில் உயர்வை கட்டமைக்கும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் மாளவிகா.
அத்துடன், தற்போது நட்பு, பாதுகாப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள் குறித்து தைரியமாக பேசும் பெண்கள் பட்டியலில் சேர்ந்தும் கொண்டுள்ளார் மாளவிகா. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி அனுபவம் பற்றி மிகவும் சிறப்பாகப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது அவர் கூறியதாவது, அப்போது அவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். ஒருநாள் இரவு, லோகல் ரெயிலில் தன் நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்த போது, ஒருவர் தன்னிடம் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகக் கூறியிருந்தார். மேலும் “ஜன்னல் பக்கம் நின்ற அந்த ஆண் என்னைப் பார்த்து ஒரு முத்தம் தருவாயா? " என்று கேட்டதாகவும் கூறியிருந்தார்.
மாளவிகா கூறிய இந்த சம்பவம், ஒரு பெண்ணின் பாதுகாப்பு பற்றிய ஏக்கத்தையும், பொதுவான இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும் வெளிக்காட்டுகின்றது. மாளவிகா கூறியதைக் கேட்ட ரசிகர்கள் அந்த ஆண் மீது மிகுந்த கோபம் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
Listen News!