தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியுள்ளார். அதாவது தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்த நாளில் இருந்து சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியா வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விகாரத்து குடும்பநல நீதி மன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பாடகி ஹெனிஷாவுடன் திருமண வீட்டில் கலந்து கொண்டதன் பின்பு சமூக வலைத்தளத்தில் ரவி மோகன் மற்றும் ஹெனிஷாவுடன் தொடர்பு படுத்தி பல கருத்துக்கள் பரவி வந்தன. இதனை தொடர்ந்து ஆர்த்தி ரவி, ரவி மோகன்,ஹெனிஷா, சுஜாதா என ஒருவர் மாத்தி ஒருவர் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி குடும்ப நல நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் இருவருக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் இன்று சென்னை குடும்ப நலநீதி மன்றத்தில் நேரில் ஆஜாராகி உள்ளார்கள்.
மேலும் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.இதற்கு பதில் அளிக்குமாறு ரவி மோகனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கின் விசாரணை ஜூன் 12ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்திற்கு வருகை தந்த இருவருடைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
Listen News!