• Apr 27 2025

மம்முட்டி படப்பிடிப்பை நிறுத்தியது புற்றுநோயால் அல்ல..! – வெளியான உண்மை இதோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரை உலகில் அழியாத புகழை வைத்திருக்கும் மம்முட்டி, தனது நடிப்பால் அதிகளவான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார். சமீபத்தில், சில சமூக வலைதளங்களில் "மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று தவறான தகவல்கள் பரவியுள்ளன. எனினும் , இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்பொழுது மம்முட்டி தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.


மேலும் அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் உறுதியாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தத்  தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். மம்முட்டி தனது ரம்ழான் நோன்பு காரணமாக தற்போது எந்த விதமான படப்பிடிப்பிலும் ஈடுபடவில்லை. வழக்கமாக, ரம்ழான் மாதத்தில் அவர் எந்த முக்கியமான வேலைகளிலும் ஈடுபடாமல், மத வழிபாடுகளில் முழுமையாக கவனம் செலுத்துவார்.


இதனால், அவருடைய படப்பிடிப்புகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதை புற்றுநோய் காரணமாக அவர் சிகிச்சை பெறுகிறார் என்று சிலர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில், மம்முட்டி எந்தவித உடல்நலக் குறைபாடும் இல்லாமல் நலமாக இருக்கிறார். அத்துடன் இந்த நோன்பு முடிந்தவுடனே மீண்டும் படப்பிடிப்பினைத் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement