தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இப்படத்தை இயக்கும் நெல்சன், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்தையும் பெரிய அளவில் உருவாக்கி வருகின்றார். அத்தகைய பெரிய முயற்சியின் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை அதிரவைத்துள்ளது.
2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2, அதிகளவு ஆடம்பரத்துடன், இந்தியா முழுவதும் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகி வருகின்றது.
இதற்கிடையே, ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலையா முக்கிய கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது அவர் ரஜினிகாந்துடன் இணையும் முதலாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது வெளியான தகவல்களின் படி, பாலையா, 20 நாள் கால்ஷீட் மட்டுமே வழங்குகிறார். ஆனால், அந்த குறுகிய காலத்திற்காக சுமார் ரூ.50 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளதாகவும், அதற்கு சன் பிக்சர்ஸ் சம்மதம் தெரிவித்துவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்சன் தற்போது உருவாக்கும் ஜெயிலர் 2, ஒரு பான் இந்தியா ஹீரோ கூட்டணியாக மாறி வருகின்றது. ரஜினி, பாலையா மற்றும் மோகன்லால் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!