தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.
இவர் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.
அதுவும் சமீப காலங்களில் தனி பாடல் காட்சிகளில் இவர் ஆடிய நடனங்களால் பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளார்.
குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற “காவலா” பாடலில் அவர் ஆடிய புகழ்பெற்ற நடனம், ரசிகர்கள் மத்தியில் அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தியது.
குறித்த பாடல் இணையம் முழுவதும் படு வைரலான நிலையில், அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்தது என்றே கூறலாம்.
இதனிடையே சில காலமாக சொல்லக்கூடிய அளவில் இவருக்கு சரியான படங்கள் அமையவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு அழகு மற்றும் சுகாதார ரீதியான பேட்டியில் தமன்னாவிடம், அவருடைய அழகும், பராமரிப்பும் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதன்போது தமன்னா கூறிய தனிப்பட்ட அழகுசார்ந்த ரகசியம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதாவது "என் முகத்தில் பருக்கள் வரும் போது, வேறு எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை. நான் எப்போதும் பருக்களின் மீது எச்சிலை வைப்பேன். இது எனக்கு பயனுள்ளதாக அமைந்து, பருக்கள் விரைவில் குணமாகிவிடும்" என தமன்னா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமன்னா தனது அழகு பராமரிப்பு நடைமுறையை எந்தவித மறைமுகமில்லாமல் நேர்மையாக பகிர்ந்ததற்காக ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Listen News!