தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்றையதினம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வு முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா- ஜோதிகா தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதனிடையே திருப்பதி சென்ற சூர்யாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேவேளை நடிகர் சூர்யா, ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நாட்டி நடராஜ், யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!