• Aug 04 2025

வசூலை வாரி இறைக்கும் "தலைவன் தலைவி"..! இந்த வாரம் 100 கோடியை தாண்டிடும் போலயே..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

ஜூலை 25, 2025 அன்று வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டு தற்போது உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வரையிலான வசூலை சாதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் கணவன் மனைவி உறவுக்குள் ஏற்படும் ஈகோ சண்டைகளை, நகைச்சுவையுடனும் உணர்வுடனும் சொல்லும் கதையாக காணப்படுகிறது. 


இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்பும் நம்பர் 1 ஹீரோக்களுடன் வெற்றிப் படங்களை உருவாக்கிய நிறுவனம் தான். ‘தலைவன் தலைவி’ படத்தில், நம்மை சிரிக்கவைக்கும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், தமிழ்சினிமாவின் தனித்துவமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையை வழங்கியிருக்கிறார்.


'தலைவன் தலைவி' ஒரு குடும்ப பின்னணியில் அமையும் காதல் மற்றும் கலகலப்பான நகைச்சுவை திரைப்படம். இதில், கணவன்-மனைவி உறவுக்குள் இயல்பாகவே ஏற்படும் “நான் தான் முக்கியம்” எனும் ஈகோ நிலைகள், அவை வளர்கின்ற விதம், பின்னர் அதனால் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் கலவையாக சொல்லப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement