• Jul 18 2025

'இந்தியன் 2’ படம் பார்க்க செல்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. மாஸ் காட்டவுள்ள 150 வினாடிகள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளிநாடுகளில் ரிலீசாக உள்ளது என்பதும் நாளை காலை 9 மணிக்கு தமிழகத்திலும், காலை 5:00 மணிக்கு வெளி மாநிலங்களிலும் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தாலும் முன்பதிவை பொருத்தவரை சுருக்கமாக இருக்கிறது என்றும் ஒரு சில திரையரங்குகளில் இன்னும் கூட சில காட்சிகளில் இருக்கைகள் காலியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் 'இந்தியன் 2’ படம் பார்க்க செல்பவர்களுக்கு ’இந்தியன் 3’ படத்தின் டிரைலர் இன்ப அதிர்ச்சியாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ட்ரெய்லர் 150 வினாடிகள் ரன்னிங் டைம் ஆக இருக்கும் என்றும் இடைவேளையின் போது இந்த ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் 'இந்தியன் 3’ திரைப்படம் சேனாதிபதியின் அப்பா கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’கோட்’  படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் இடைவேளையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மொத்தத்தில் ’இந்தியன் 2’ படம் பார்க்க செல்பவர்களுக்கு 'இந்தியன் 3’ திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்படுவது உறுதி என்று கூறப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Advertisement

Advertisement