கடந்த 2001ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பலமொழிகளிலும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கலக்கி வருகின்றார். இவர் குறைந்த காலத்திலேயே 25 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
இவருடைய இசையில் வெளியான மைனா, கும்கி, ரஜினி முருகன், ரோமியோ ஜூலியட், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, விஸ்வாசம் போன்ற பல பட பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் ஆகின.
2019 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார் டி.இமான். இவருடைய பாடல்கள் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாக மாறி உள்ளன.
2008 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும் இவர் இரண்டாவது ஆக அமலியா என்பவரை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் டி. இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் டி. இமான் ஒதுக்கப்படுகின்றாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .
அதாவது தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழும் டி. இமானுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் தற்போது எந்த படங்களிலும் இவருடைய இசை பெரிதாக இடம்பெறவில்லை.
அது மட்டும் இல்லாமல் இவருடன் தொடர்ந்து பணியாற்றிய இயக்குநர்களான பாண்டிராஜ், எழில், பொன்ராம், பிரபு சாலமன் போன்றவர்கள் கூட தற்போது இவருக்கு வாய்ப்பு தருவதில்லை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லாமல் திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பேசுப்பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!