தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான நடனத்திற்கும், நடிப்பிற்கும், சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது அவர் தனது வாழ்க்கையின் உணர்ச்சி பூர்வமான தருணத்தை வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறும் ஒரு விஷயம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ராகவா லாரன்ஸ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களையும், சமூகப் பொறுப்பினையும் பற்றி தனது தனிப்பட்ட அனுபவங்களோடு பகிர்ந்துள்ளார்.
அதன்போது லாரன்ஸ், “குரூப் டான்ஸராக இருந்த காலத்தில் நான் வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து, அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். என் அம்மா அந்த பணத்தை சேமித்து வைத்துப் பிறகு, ஒரு நிலம் வாங்கி, அதில் ஒரு வீடு கட்டினார். அந்த வீடு தான் இது.” என்று கூறியிருந்தார்.
எனினும், அந்த வீட்டில் வளர்ந்த பெண் ஒருவர் தற்பொழுது டீச்சராக இருப்பதனால் அந்த வீட்டை சில மாற்றங்கள் செய்து பள்ளியாக மாற்றி இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஏனெனில், உண்மையான மாற்றம் கல்வியால் தான் வரும்.
இந்த வீட்டின் பின்னணியில் இருக்கும் கதை, சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அது ஒரு ரசிகன் மனதை உருக்கும் நிஜம். லாரன்ஸ், தான் கஷ்டப்பட்ட காலங்களை, அம்மாவின் அர்ப்பணிப்பு, மற்றும் சாதனையின் ஆரம்ப கட்டங்களை பகிர்ந்தபோது, பலருடைய கண்களில் கண்ணீர் பாய்ந்தது.
இந்த வீடு, அவருடைய குடும்பத்தின் ஆசையையும், தியாகத்தையும் பிரதிபலிக்கிறது. இன்று அந்த வீடு, பலருக்கும் கல்வி வழங்கும் பள்ளி ஆக மாறவுள்ளது என்பதே உண்மையான சாதனையாகும்.
Listen News!