விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதைக்களத்துடன் சீரியல்களின் ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை பார்க்க விஜயாவும் அண்ணாமலையும் அவர்களுடைய அம்மா வீட்டிற்கு செல்கின்றார்கள். அங்கு முத்துவை அழைத்து போக வருமாறு கூப்பிட, முத்து நான் பாட்டி கூடவே இருக்கேன், வீட்டிற்கு வரவில்லை என சொல்லுகிறார்.
அதன்பின், வீட்டிற்கு வந்த முத்துவை விஜயா வெறுப்போடு நடத்துகிறார். மேலும் மனோஜ்க்கு சாப்பாடு போட்டுக் கொடுத்த விஜயா, முத்துவை தானே போட்டு சாப்பிடுமாறு சொல்லுகின்றார். இதனால் கோவப்பட்ட முத்து சாப்பாட்டை கீழே போட்டு உடைக்கின்றார்.
இதை பார்த்து கோபப்பட்ட விஜயா, முத்துவுக்கு திட்டியதோடு அவரை தடியால் அடிக்கின்றார். இதனால் பாட்டிக்கு கால் பண்ணிய முத்து நான் உன் கிட்டயே வந்து விடுகின்றேன் என்று போனில் அழுகின்றார்.
இதைத்தொடர்ந்து திடீரென சீர்திருத்த பள்ளியில் இருந்து முத்துவை இழுத்துச் செல்கின்றார்கள். ஆனாலும் காரணம் தெரியவில்லை. அங்கிருந்த அண்ணாமலை அவர்களிடம் கெஞ்சவும், அவங்க முத்துவை கூட்டிட்டு போகட்டும் விடுங்க என்று அண்ணாமலையிடம் சொல்லுகின்றார் விஜயா.
எனினும் முத்து சிறார் ஜெயிலுக்கு ஏன் சென்றார் என்று தெரியவில்லை. இதற்கான கதைக்களம் இனிவரும் நாட்களிலேயே தொடரும். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!