தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர் சூர்யா, தற்பொழுது மாறுபட்ட கதையமைப்பில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக அக்கறை, சினிமாவுக்காக தேர்ந்தெடுத்த கதைகள் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களை ஏற்கும் அவரது அணுகுமுறையால் ஒவ்வொரு புதிய படத்திலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றார்.
'ஜெய் பீம்' மற்றும் 'சூரரைப் போற்று' போன்ற படங்களுக்குப் பிறகு, சூர்யா நடிக்கும் இந்த 'கருப்பு' திரைப்படம் முழுக்க முழுக்க புதிய லுக் மற்றும் தீவிரமான கதையமைப்புடன் உருவாகி வருகிறது. மேலும், இப்படத்தில் இயக்குநராக RJ பாலாஜி காணப்படுகின்றார்.
இந்தப் படத்தில் சூர்யா, இதுவரை எந்த படத்திலும் பார்க்காத ஒரு intense look-ல் நடிக்கிறார். கிராமிய பின்னணியுடன் கூடிய சஸ்பென்ஸ்-ட்ராமா என கூறப்படுகின்ற இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் மிக முக்கியமான சவாலாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது தயாரிப்பு சூழ்நிலை, VFX பணிகள், படப்பிடிப்பு கால தாமதம் போன்ற காரணங்களால், இப்படத்தின் வெளியீட்டு தேதி 2026-ம் ஆண்டு ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Listen News!