• Aug 15 2025

காட்டு மொக்க படம் தான் பார்க்க போறோம்னு நினைச்சுக்கோங்க..! கூலி விமர்சனம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  நேற்றைய தினம் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக காணப்படுகின்றது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக கூலி திரைப்படம் நேற்றைய தினம் உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியானது.  இந்த படத்தில் ரஜினிகாந்துடன் கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் கைகோர்த்துள்ளார். மேலும் இவர்களுடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சௌபின்,  உபேந்திரா மற்றும் கேமியா ரோலில் அமீர்கான் கூட மிரட்டி இருப்பார்.


கூலி திரைப்படம்  தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.  ஆனாலும் கூலி திரைப்படத்திலும் அவர் பழைய  மாவையே அரைத்துள்ளதாக நெட்டிசன்கள்  குறிப்பிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.  அதன்படி அவர் கூறுகையில், சில படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்தீங்க என்றால் ஒரு சுமாரான படமாக இருக்கும். ஆனால் இந்த படம் காட்டு மொக்கை என்று ஊரெல்லாம் பரவிருச்சு.. 

நீங்க ஒரு காட்டு மொக்க படம் தான் பார்க்கப் போறோம் என்று நினைத்து போய் பார்த்தால் கூட அதைவிட இந்தப் படம் மொக்கையாக தான் இருக்கும் என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த கருத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொதித்து எழுந்து வருகின்றார்கள்.  வழமையாகவே தமிழில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் கொடுப்பார் என்ற கருத்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement