• Apr 27 2025

பொம்பளையா மாறுவது இவ்வளவு கஷ்டமா? கவின் லேடி கெட்டப் மேக்கப் வீடியோ.

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் வரும் மே மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் அந்த பாடலில் கவின் லேடி கெட்டப்பில் இருந்து அசத்தினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் கவினுக்கு லேடி கெட்டப் எப்படி போடப்படுகிறது என்பது குறித்த காட்சிகள் இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் லேடி கெட்டப்பாக மாறுவது இவ்வளவு கஷ்டமா என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு லேடி கேட்டப் போட்ட வீடியோ ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு லேடி கட்ட போட்ட வீடியோ வைரலான நிலையில் அதற்கு இணையாக இந்த கெட்டப் உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

கவின், அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள இந்த படத்தை இளன் இயக்கியுள்ளார். எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.



Advertisement

Advertisement