• Jul 18 2025

முதல்வர் வந்தவுடனே.. கையும் ஓடல.. காலும் ஓடல... கிங்காங்கின் நெகிழ்ச்சி பதிவு வைரல்.!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் தனது காமெடியான நடிப்பால் அன்பும் கவனமும் பெற்றவர் நடிகர் கிங்காங்க். சமீபத்தில் அவரது மகள் கீர்த்தனாவின் திருமணம், பிரமாண்டமாக நடைபெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதில் திரையுலக பிரமுகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் துறையிலிருந்தும் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தனது ஆசீர்வாதத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த சம்பவம், கிங்காங்கை நெகிழ வைத்துள்ளது. அது குறித்து கிங்காங் தற்பொழுது வெளியிட்ட உணர்வுபூர்வமான நன்றி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


அந்த வீடியோவில் நடிகர் கிங்காங்க் மிகவும் எமோஷனலாக, "நான் நினைச்சே பார்க்கல அவர் வருவார் என்று.. கையும் ஓடல, காலும் ஓடல.." எனத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் திருமணத்திற்கு ஸ்டாலின் வருகை தந்தது கிங்காங்கிற்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பதனை அறியமுடிகிறது.


Advertisement

Advertisement