• Sep 06 2025

KPY பாலாவிற்கு இவ்வளவு தான் வரவேற்பா.? "காந்தி கண்ணாடி" முதல் நாள் வசூல் விபரம் இதோ..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஒரு புதிய முகமான நடிகர் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் 'காந்தி கண்ணாடி' நேற்று திரையரங்குகளில் வெளியானது. இத் திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு குறைவாக இருந்த போதிலும், படம் வெளியான பின்பு அதற்கான பாசிட்டிவ் டாக் பரவத் தொடங்கியது.

இயக்குநர் ஷெரீஃப் இயக்கியுள்ள இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பலரது பாராட்டையும்  பெற்றுள்ளது.


புதிய ஹீரோக்களாக நடிக்க வருபவர்கள் பெரும்பாலும் தங்களை மையமாக வைத்து, மாஸ் மற்றும் கமர்ஷியல் கதைகளை தேர்வு செய்யும் நிலை அதிகமாகவே காணப்படுகிறது. அந்தவகையில் பாலா தனது முதல் படத்திலேயே தன்னை முன்னிறுத்தும் வகையில் கதையை தேர்வு செய்து நடித்திருந்தார். 


இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது. சினிமா வசூல் தரவுகளை வெளியிடும் பிரபல இணையதளம் சாக்னிக், 'காந்தி கண்ணாடி' திரைப்படம் முதல் நாளில் ரூ.35 லட்சம் வரை வசூலித்ததாக அறிவித்துள்ளது. இது பாலா ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

Advertisement

Advertisement