தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிலம்பரசன், ரசிகர்களிடையே "சிம்பு" என்றழைக்கப்படுகிறார். சமீபத்தில் வெளியாகிய 'தக் லைஃப்' திரைப்படத்தை தொடர்ந்து, STR தனது அடுத்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து செய்ய உள்ளார்.
இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. காரணம், வெற்றிமாறன் வழக்கமாக எடுக்கும் சினிமா, சமூக அரசியல் கதைகள் மற்றும் கேங்ஸ்டர் பின்னணிக்குள் இருக்கும் உண்மைச் சாயலான கதைகளாக காணப்படும். அந்தவகையில், STR-ன் மாஸ், வெற்றிமாறனின் கிளாஸ் – இரண்டும் சேர்ந்தால், தமிழ் சினிமா எதிர்பார்க்கும் பெரும் வெடிப்பு உருவாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
படம் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், இது 'வடசென்னை-2' படத்திற்குப் பிறகு, அதே சூழலில் உருவாகும் இன்னொரு படமாக இருக்கலாம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. STR, இந்தப் படத்தில் இரு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், தற்போது அறிவிப்பு வீடியோ (Announcement Video) ஏற்கனவே படமாக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 4), இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!