சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து கிரிஷைப் பார்த்து ஸ்கூலில இருந்து வெளியில வாற அளவுக்கு அங்க என்னதான் ஆச்சு என்று கேட்கிறார். அதுக்கு மீனா அவனுக்கு அங்க இருக்க பிடிக்கல அதுதான் வந்திட்டான் என்கிறார். இதனைத் தொடர்ந்து முத்து மீனாவோட அம்மாவப் பார்த்து கிரிஷ் கொஞ்ச நாளைக்கு உங்க வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட மீனாவோட அம்மா அதுக்கென்ன தம்பி இவன் இங்கயே இருக்கட்டும் என்கிறார். பின் முத்து ஸ்கூலில போய் என்ன நடந்தது என்று கேட்டிட்டு வருவம் என்று கிளம்புறார். அதனை அடுத்து ரோகிணி ஸ்கூலில நின்று கிரிஷ் எங்க போய்ட்டானோ தெரியல என்று சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து முத்துவோட கார் வாறதை பார்த்த ரோகிணி ஓடிப் போய் காருக்குள்ள ஏறுறார்.
அதனை அடுத்து மீனாவும் முத்துவும் ஸ்கூலில போய் principal கிட்ட கிரிஷுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்கினம். பின் ஸ்கூல் principal ரோகிணிக்கு போன் எடுத்து கிரிஷ் கிடைச்சிட்டான் என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து ரோகிணி வீட்டில இருக்கிற எல்லாருக்கும் மகேஷ்வரி தான் கிரிஷோட கார்டியன் என்கிறார்.
பின் மீனா கிரிஷுக்கு அந்த ஸ்கூலில இருக்கிறது பிடிக்கல அதுதான் எங்கட அம்மா வீட்ட விட்டனான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா அவனோட அம்மாவுக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!